விவசாய நிலத்தில் இறந்து கிடந்த மானை படத்தில் காணலாம்.
நிலத்தில் இறந்து கிடந்த புள்ளி மான்
- உணவு செரிமானத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் இறந்தது கிடந்து
- உடலை தீயிட்டு எரித்தனர்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த எல்லப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் எத்திராஜ் இவருக்கு சொந்தமாக அதேபகுதியில் விவசாய நிலம் உள்ளது. இதில் கால்நடைகளுக்கு தேவையான தீவன பயிர்கள் வளர்த்து வருகிறார்.
நேற்று எத்திராஜ் விவசாய நிலத்தை சுற்றிப் பார்ப்பதற்காக சென்றார். அப்போது நிலத்தில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.
உடனே அங்கு சென்று பார்த்த போது சுமார் 2 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மான் ஒன்று 2 நாட்களுக்கு முன்பாக இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து உடனடியாக ஒடுகத்தூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த வனச்சரக அலுவலர் இந்து தலைமையில் வனக்காப்பாளர்கள் சங்கீதா, வெங்கடேஷ் ஆகியோர் இறந்து கிடந்த மானை மீட்டு கால்நடை மருத்துவர்களின் உதவியுடன் பிரேத பரிசோதனை செய்து பார்த்ததில் உணவு செரிமானத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் மான் இறந்தது தெரியவந்தது.
பின்னர் மானை வனத்துறையினர் கைப்பற்றி தீயிட்டு எரித்தனர்.