உள்ளூர் செய்திகள்
திருக்கல்யாண ராமபிரானுக்கு விசேஷ அலங்காரம்
- தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடந்தது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் நெல்வாய் கிராமத்தில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான சிறப்பு மிக்க ராமபிரான் கோவில் உள்ளது.
இங்கு அனைத்து விஷேச தினங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றனர்.
இதனைதொடர்ந்து இன்று தமிழ்வருட பிறப்பு முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி உடன் கோவில் நடை திறக்கப்பட்டு 5.30 மணிக்கு தவன பந்தலின் கீழ் ஸ்ரீ ராமசுவாமிக்கு விசேஷ பால், தயிர், பன்னீர், சந்தனம், மஞ்சள் திருமஞ்சனம் செய்யப்பட்டது.
தொடர்ந்து சந்தனத்தால் ஸ்ரீ கல்யாண ராமர் திருக்கோல விசேஷ அலங்காரம் செய்யப்பட்டது. பன்னீர் புஷ்பத்தால் விசேஷ அர்ச்சனை செய்யப்பட்டு ராஜோபசார பூஜைகள் செய்யப்பட்டு மகாதீப ஆராதனையானது நடைபெற்றது.
இதில் நெல்வாய் சுற்றுப்பகுதியில் உள்ள சுமார் 500 க்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் கலந்துக் கொண்டு தரிசனம் செய்தனர்.