உள்ளூர் செய்திகள்

பாம்புகளை பயிற்சி இன்றி பிடிக்க கூடாது

Published On 2023-10-07 15:15 IST   |   Update On 2023-10-07 15:15:00 IST
  • வனத்துறையினர் விழிப்புணர்வு
  • துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது

அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு, ஒடுகத்தூர் பகுதியில் புள்ளிமான், காட்டுபன்றி, காட்டு எருமை, முள்ளம்பன்றி. மயில், குரங்குகள் போன்ற வனவிலங்குகள் உணவைத் தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைகின்றன.

அதேபோல் மலைப்பாம்பு, நாகப்பாம்பு, கட்டு விரியன், கண்ணாடி விரியன், சாரைப்பாம்பு உள்ளிட்ட விஷப்பாம்பு வகைகளும் ஊருக்குள் அடிக்கடி படையெடுத்து வருகின்றது.

இது போன்ற நேரங்களில் பொதுமக்கள் அளிக்கும் புகாரின் பேரில் இரவும் பகலும் பாராமல் வனத்துறையினர் விரைந்து சென்று பாம்புகளை பிடித்து காப்பு காட்டில் கொண்டு சென்று விடுகின்றனர்.

அதேபோல் ஒரு சில இடங்களில் பொதுமக்கள் மற்றும் உள்ளூர் இளை ஞர்கள் சாகசம் செய்வதாக நினைத்து பாம்புகளை கைகளால் பிடிக்கின்றனர்.

இளைஞர்கள் பிடிக்கும்போது பாம்புகள் அதிக அளவில் துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுகிறது.

மேலும் பாம்புகளை பொதுமக்கள் பிடிக்கும் போது அசம்பாவித சம்பவங்களும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இளைஞர்கள் பாம்புகளை பயிற்சி இல்லாமல் பிடிக்க கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து வனச்சர கத்திற்க்கு உட்பட்ட மலைப்பகுதிகளை சார்ந்து இருக்க கூடிய சுமார் 10-க்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் நேற்று வனச்சரகர் இந்து தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் துண்டு பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

Similar News