உள்ளூர் செய்திகள்

வனப்பகுதியில் தைலமரம் வெட்டி கடத்த முயற்சி

Published On 2023-10-26 13:53 IST   |   Update On 2023-10-26 13:53:00 IST
  • தன் நிலத்தில் உள்ளது என்று நினைத்து வனத்துறைக்கு சொந்தமான மரத்தை வெட்டினார்
  • வனத்துறையினர் விசாரணை

அணைக்கட்டு:

ஒடுகத்தூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. இதில், கல்லுட்டை 13-வது வார்டு கவுன்சிலராக அ.தி.மு.க.வை சேர்ந்த தேவி என்ற பெண் கவுன்சிலர் உள்ளார்.

இவரது கணவர் சிவகுமார்(50). இவர் அ.தி.மு.க.வில் முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார். இவர்களுக்கு சொந்தமாக வனப்பகுதியை ஒட்டி விவசாய நிலம் உள்ளது.

இந்நிலையில், பெண் கவுன்சிலர் தேவியின் கணவன் சிவகுமார் நேற்று விவசாய நிலத்திற்கு சென்று தன் நிலத்தில் உள்ளது என்று நினைத்து வனத்துறைக்கு சொந்தமான சுமார் 1 டன் எடை கொண்ட தைல மரத்தை அனுமதியின்றி வெட்டி கடத்த முயன்றார்.

இதுகுறித்து, வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், வனச்சரக அலுவலர் இந்து தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வெட்டி வைக்கப்பட்டிருந்த மரத்தை கைப்பற்றினர்.

இதற்கிடையே, சிவகுமார் வனத்துறையினர் வருவதையறிந்ததும் தப்பியோடி தலைமறைவாகி விட்டார். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வனத்து றையினர் தலைமறைவாக உள்ள சிவகுமாரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News