கோர்ட்டுகளில் பல்வேறு வழக்குகளுக்கு சுமூக தீர்வு
- மாவட்டங்கள் முழுவதும் உள்ள நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது
- விபத்து இழப்பீடு வழக்கு உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது
வேலூர்:
மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில் வேலூர் கோர்ட்டு வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவரும், எஸ்.சி., எஸ்.டி. கோர்ட்டு நீதிபதி சாந்தி தலைமை தாங்கினார்.
இதில் நில ஆர்ஜித வழக்கு, குடும்ப நல வழக்கு, தொழிலாளர் வழக்கு, விபத்து இழப்பீடு வழக்கு உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
வழக்கில் தொடர்புடையவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு சமரசம் மூலம் தீர்வு காணப்பட்டது. இதில் வக்கீல் தேவராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் முழுவதும் உள்ள நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
இதில் பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. சம்பந்தப்ப ட்டவர்களுக்கு வழக்குக்கான இழப்பீடு தொகை வழங்கவும் உத்தரவி டப்பட்டது.