உள்ளூர் செய்திகள்

விதைபந்துகள் தூவும் பணியை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்த காட்சி.

தீர்த்தகிரி மலையில் ஒரு லட்சம் விதை பந்துகள் பள்ளி மாணவர்கள் தூவினர்

Published On 2023-09-22 15:22 IST   |   Update On 2023-09-22 15:22:00 IST
  • கலெக்டர் தொடங்கி வைத்தார்
  • பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

வேலூர்:

வேலூரை அடுத்த வெங்கடாபுரம் ஊராட்சியில் உள்ள தீர்த்தகிரி மலைபகுதியில் ஒரு லட்சம் விதைப்பந்துகள் தூவும் பணியினை இன்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்.

இதில் புங்கன், தூங்குவாகை, ஆலம், அரசம், சரக்கொன்றை, மகிழம் உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டு மர விதைகளை மாணவ, மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மலைப்ப குதியில் ஆங்காங்கே தூவினர்.

இதனை தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் கையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஊர்வலமாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் ஒரு ஒன்றிய குழு தலைவர், சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News