உள்ளூர் செய்திகள்

தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக போராட்டம்

Published On 2023-10-19 13:44 IST   |   Update On 2023-10-19 13:44:00 IST
  • கலெக்டர் பேச்சு வார்த்தையில் சமரசம்
  • அனைவரும் கலைந்து சென்றனர்

வேலூர்:

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. இங்கு 1200 பெண் பணியாளர்களும், 400 ஆண் பணியாளர்களும் ஒப்பந்த துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒப்பந்த பணியாளர்க ளுக்கு தினக்கூலியாக ரூ.350 வழங்கப்பட்டு வருகிறது. தினக்கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என ஒப்பந்த பணியாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதையடுத்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஒப்பந்த பணியாளர்களுக்கு ரூ.538 வழங்க வேண்டும் என ஆணை பிறப்பித்தார்.

இருப்பினும் ஒப்பந்த பணியாளர்களுக்கு கூலியை உயர்த்தாமல், பழையபடியே சம்பளம் வழங்கப்படுகிறது.

கூலியை உயர்த்த கோரி அதிகாரிகள் அவகாசம் கேட்டனர். ஆனால் இதுவரை அதிகாரிகள் எந்தவித பேச்சுவார்த்தை யும் நடத்தவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த ஒப்பந்த பணியாளர்கள் நேற்று வேலையை புறக்கணித்து மாநகராட்சி அலுவலக நுழைவு வாயிலில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மேயர் சுஜாதா மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சமரசம் ஏற்படவில்லை.

இதனைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக ஒப்பந்த ஊழியர்கள் வேலையை புறக்கணித்து மாநகராட்சி அலுவலகம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன் விரைந்து சென்று போராட்டக்காரர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினார்.

அப்போது கலெக்டர், உங்களுடைய கோரிக்கை விரைவில் சுமூக முறையில் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதி அளித்தார்.

இதனைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News