உள்ளூர் செய்திகள்

வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய காட்சி.

பணியின் போது உயிர் நீத்த போலீசாருக்கு வீர வணக்கம்

Published On 2023-10-21 13:35 IST   |   Update On 2023-10-21 13:35:00 IST
  • டி.ஐ.ஜி, எஸ்.பி. மலர் வளையம் வைத்து அஞ்சலி
  • மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 10 பேர் உயிரிழந்தனர்

வேலூர்:

சீன ராணுவத்தினர் கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ந்தேதி மறைந்திருந்து திடீர் தாக்குதல் நடத்தியதில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 10 பேர் உயிரிழந்தனர்.

எல்லையை காக்கும் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்து, ஆண்டுதோறும் அக்.21-ந்தேதி வீர வணக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது.

அதன்படி வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூணுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன், கோடீஸ்வரன, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் திருநாவுக்கரசு, பழனி மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் திரளான போலீசார் கலந்துகொண்டு நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அப்போது போலீசார் வானத்தை நோக்கி 16 துப்பாக்கி குண்டுகள் முழங்கி அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News