உள்ளூர் செய்திகள்

ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனை

Published On 2023-08-01 09:54 GMT   |   Update On 2023-08-01 09:54 GMT
  • பொய்கையில் செவ்வாய்க்கிழமைதோறும் மாட்டுச்சந்தை நடைபெறும்
  • மாடுகள் அதிக அளவில் கொண்டுவரப்பட்டன

வேலூர்:

வேலூர் அடுத்த பொய்கை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் மாட்டுச்சந்தை நடைபெறும்.

இந்த சந்தைக்கு உள்ளூர் மட் டுமின்றி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற் றும் அண்டை மாநிலமான ஆந்திர மாநிலம் வி.கோட்டா, குப்பம், பலமநேர், புங்கனூர் என பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

இதனால் சீசன் நேரங்களில் இந்த சந்தையில் கோடிக்கணக்கில் விற்பனை நடைபெறும்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. இதனால் வெளியூர்களில் இருந்து மாடுகள் வாங்கி செல்லவும், கொண்டு வரவும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த வாரத்தை விட இன்று ஆயிரத் துக்கும் மேற்பட்ட மாடுகள், இதர கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

குறிப்பாக கறவை மாடுகள், ஜெர்சி கலப் பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், எருமைகள் விற்பனைக்கு வந்தது. இதனால் கடந்த வாரம் ரூ.60 லட்சத்துக்கு குறைவாக வர்த்தகம் இருந்தது.

இன்று ரூ.1 கோடிக்கு வியாபாரம் போனதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

Tags:    

Similar News