உள்ளூர் செய்திகள்
கிணற்றில் விழுந்த பசு மாடு மீட்பு
- மேய்ச்சலுக்காக விட்டிருந்த போது விபரீதம்
- 2 மணி நேரம் போராடி மீட்டனர்
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த கத்தாரிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 35), இவருக்கு சொந்தமாக அப்பகுதியில் விவசாய நிலம் உள்ளது. அதேபோல், சொந்தமாக மாடுகளை பராமரித்து வருகிறார்.
இந்நிலையில், வழக்கம்போல் பசுவை நிலத்தில் மேய்ச்சலுக்காக விட்டு இருந்தார். அப்போது, அருகே இருந்த சுமார் 60 அடி ஆழம் கொண்ட கிணற்றில் பசு மாடு தவறி விழுந்தது.
உடனே இதுகுறித்து அந்த பகுதி மக்கள் ஒடுகத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் மகேஷ்வரன் தலைமையிலான வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி பசு மாட்டை உயிருடன் மீட்டனர்.