உள்ளூர் செய்திகள்

ஆற்காடு, பூட்டுத்தாக்கு, விரிஞ்சிபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

Published On 2023-10-16 13:47 IST   |   Update On 2023-10-16 13:47:00 IST
  • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நிறுத்தம் செய்யப்படும்
  • மின் அதிகாரி தகவல்

வேலூர்:

வேலூர் துணை மின் நிலையம், இறைவன்காடு துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

இதனால் நாளை (செவ்வாய்க் கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலூர் புதிய பஸ் நிலையம், பைபாஸ்ரோடு, தோட்டப்பாளையம், பழைய பஸ் நிலையம், வேலூர் டவுன் பஜார், சலவன்பேட்டை, ஆபிச ர்ஸ்லைன், அப்துல்லாபுரம், கிருஸ்ணாநகர், பிஷப் டேவிட் நகர், கஸ்பா, ஊசூர், கொணவட்டம், சேண்பாக்கம் மற்றும் விருதம்பட்டு, செங்கா நத்தம்ரோடு, கொசப்பேட்டை, ஒல்டுடவுன், சார்பனாமேடு, பி.டி.சி ரோடு அதை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும், மற்றும் விரிஞ்சிபுரம், பொய்கை, இறைவன்காடு, செதுவாலை, வல்லண்ட ராமம், கந்தனேரி, கழனிபாக்கம் மருதவல்லி பாளையம். அன்பூண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தப்படும்.

ஆற்காடு துணை மின் நிலையம், மாம்பாக்கம் துணை நிலையம், பூட்டுத்தாக்கு மற்றும் கத்தியவாடி துணை மின் நிலையத்தில் மின்சாதன பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

இதனால் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஹவுசிங்போர்டு, வேப்பூர், விஷாரம், நந்தியாலம், தாழனூர், ராமநாதபுரம், கூராம்பாடி, உப்புப்பேட்டை, கிருஷ்ணா வரம், லப்பப்பேட்டை, முப்பதுவெட்டி, தாஜ்புரா, தக்கான்குளம், களர், ஆயிலம், அருங்குன்றம், ஆயிலம்புதூர், ராமாபுரம். ரத்தினகிரி, கத்தியவாடி, கீழ்குப்பம், ஆயிலம், கன்னிகபுரம், சனார்பண்டை, மேல குப்பம், கிழ்செங்கநாத்தம் மேல்செங்கநாத்தம்.

மாம்பாக்கம், குப்பிடிசாத்தம், மருதம், இருங்கூர், பென்னகர், வாழப்பந்தல், வேம்பி, அத்தியானம், ஆருர், வடக்குமேடு, தட்டச்சேரி, மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் மின் நிறுத்தம் செய்யப்படும்.

இந்த தகவலை செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News