வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் தொல்லியல் துறை கண்காணிப்பு அலுவலர் காளிமுத்து ஆய்வு செய்த காட்சி.
வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் அறைகளை காலி செய்ய உத்தரவு
- சென்னை மண்டல தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்
- தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது
வேலூர்:
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஜலகண்டேஸ்வரர் கோவில் சார்பில் இரண்டு அறைகளை சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களை வைத்து உள்ளனர்.
ஜலகண்டேஸ்வரர் கோவில் பயன்படுத்தப்படும் அறைகள் சேதம் அடைந்து வருவதாகவும் அதனை பராமரிப்பு செய்ய வேண்டி உள்ளதால் அறைகளை காலி செய்ய தொல்லியல் துறை உதவி பராமரிப்பு அலுவலர் அகல்யா உத்தரவிட்டார்.
இதனால் ஜலகண்டேஸ்வரர் கோவில் சார்பில் இந்து முன்னணி நிர்வாகிகளுக்கும் தொல்லியல் துறை அதிகாரிகளுக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து சென்னை மண்டல தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து இன்று ஜலகண்டேஸ்வரர் கோவில் முழுவதும் ஆய்வு செய்தார்.
அப்போது ஜலகண்டேஸ்வரர் கோவில் சார்பில் பயன்படுத்தும் அறைகளை 3 நாட்களில் காலி செய்து தர வேண்டும். உணவு உண்பதற்காக பயன்படுத்தப்படும் டேபிள் சேர்களை அப்புறப்படுத்த வேண்டும் என கோவில் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார்.