வேலூர் மாவட்டத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் அறிவிப்பு
- 100 டன் அரவை கொப்பரை கொள்முதல் செய்ய இலக்கு
- கலெக்டர் தகவல்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் தென்னை விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைத்திடவும், வருவாயை பெருக்கிடவும் தமிழக அரசு வேளாண்மை விற்பனை, வேளாண் வணிகத் துறை மூலம் அரவை கொப்பரை நியாயமான சராசரி தரம் கிலோ ஒன்றுக்கு ரூ.108.60 என்ற விலைக்கு மத்திய அரசு நிறுவனமான என்.ஏ.எப்.இ.டி மூலம் வரும் நவம்பர் 26-ந் தேதி வரை கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, வேலூர் ஒழுங்கு முறை விற்ப னைக்கூடம், குடியாத்தம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் ஆகியவற்றில் தலா 100 டன் அரவை கொப்பரை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்க ப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், நிலச்சிட்டா, அடங்கல் சான்றுகளுடன் வேலூர், குடியாத்தம் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பதிவு செய்து பயன் பெறலாம். விளை பொருட்களுக்கான தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
மேலும், விவரங்களுக்கு வேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர்- 88705- 80901, குடியாத்தம் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் 79047-60772 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.