உள்ளூர் செய்திகள்
வீட்டுமனை பட்டா கேட்டு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த இஸ்லாமிய பெண்கள்.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வீட்டு மனை கேட்டு இஸ்லாமிய பெண்கள் முற்றுகை
- குடியிருக்க வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
- 1500 பெண்கள் பங்கேற்பு
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது. இதில் ஏராளமானோர் மனு கொடுத்தனர்.
இதில் 1500 பெண்கள் கலெக்டர் அலுவலக வாசலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.வேலூர் அடுத்த அரியூரில் வக்பு வாரிய நிர்வாகத்தில் பல ஏக்கர் நிலங்கள் உள்ளது. அந்த பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு குடியிருக்க வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கூறினர்.
பின்னர் அவர்கள் இது சம்பந்தமாக கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டதால் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மனு கொடுத்த பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.