உள்ளூர் செய்திகள்

குடியாத்தத்தில் ஆதிபராசக்தி ஆன்மீக வழிபாட்டு மன்றம் சார்பில் கஞ்சி கலசம், தீச்சட்டி ஊர்வலம் நடந்த காட்சி.

ஆதிபராசக்தி ஆன்மீக வழிபாட்டு மன்றம் சார்பில் கஞ்சி கலசம், தீச்சட்டி ஊர்வலம்

Published On 2022-12-26 15:57 IST   |   Update On 2022-12-26 15:57:00 IST
  • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

குடியாத்தம்:

குடியாத்தம் மேல்மருவத்தூர் சுயம்பு ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க இளைஞர் மகளிர் வழிபாட்டு மன்றம் சார்பில் 43 ஆம் ஆண்டாக சக்தி மாலை அணிவது கஞ்சி கலச ஊர்வலம் அன்னதானம் தீச்சட்டி ஊர்வலம் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

குடியாத்தம், பேர்ணாம்பட்டு தாலுகாக்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சக்தி மாலை அணிந்து விரதம் இருந்து மேல் மருவத்தூருக்கு இருமுடி செலுத்தி வருகின்றனர்.

நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக குடியாத்தம் தரணம்பேட்டையில் உள்ள முத்தியாலம்மன் கோவிலில் நேற்று கஞ்சி கலச ஊர்வலம் நடைபெற்றது.

இந்த ஊர்வலத்தை முன்னிட்டு முத்தியாலம்மன் சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது.

தொடர்ந்து 501 பெண்கள் கஞ்சி கலசம் எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கள்ளூர் காந்தி நகரில் உள்ள மன்றத்தை அடைந்தனர். தொடர்ந்து ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலையில் முத்தாலம்மன் கோவிலிலிருந்து 251 பெண்கள் தீச்சட்டி ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்று மன்றத்தை அடைந்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க மாவட்ட தலைவர் கே.எம்.எஸ்.ஜெயவேல், மன்ற உறுப்பினர்கள் ஜீவா, பாபு, பாலாஜி, இளைஞரணி மாவட்ட செயலாளர் ஜி.சரவணன் உள்ளிட்ட மன்றத்தினர் ஏற்பாடு செய்து இருந்தனர்.

Tags:    

Similar News