உள்ளூர் செய்திகள்

வேலூர் புதிய மீன் மார்க்கெட்டில் மீன்கள் வாங்க குவிந்த அசைவ பிரியர்கள்

வரத்து குறைவால் மீன்கள் விலை அதிகரிப்பு

Published On 2023-05-14 13:50 IST   |   Update On 2023-05-14 13:50:00 IST
  • அசைவ பிரியர்கள் அதிர்ச்சி
  • பலர் விலையைக் கேட்டு மீன்களை வாங்காமல் திரும்பிச் சென்றனர்

வேலூர்:

வார விடுமுறையான இன்று வேலூர் புதிய மீன் மார்க்கெட்டில் அசைவ பிரியர்கள் ஏராளமானோர் மீன்கள் வாங்க அதிகாலை முதல் குவிந்தனர். மீன்களின் விலையைக் கேட்ட அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கடந்த வாரத்தை விட இன்று மீன்களின் விலை இரண்டு மடங்காக விலை ஏற்றம் கண்டுள்ளது. தமிழகத்தில் 40 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் குறைந்த அளவு மீன்கள் வரத்து உள்ளது. இதனால் மீன்களின் விலை இரண்டு மடங்காக அதிகரித்து உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

வஞ்சரம் மீன் ரூ.1450-க்கும், சங்கரா 350, எரா 400,கொடுவா மீன் 450,கட்லா உள்ளிட்ட ஏரி வகை மீன்கள் 150, நண்டு ரூ.400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மீன் வாங்க வந்தவர்களில் பலர் விலையைக் கேட்டு மீன்களை வாங்காமல் திரும்பிச் சென்றனர்.

Tags:    

Similar News