உள்ளூர் செய்திகள்

விஜயதசமி இலக்கிய விழாவில் கலை நிகழ்ச்சி நடந்தது.

விஜயதசமி இலக்கிய விழாவில் நாட்டுப்புற, தெம்மாங்கு இசை நிகழ்ச்சி

Published On 2023-10-29 14:20 IST   |   Update On 2023-10-29 14:20:00 IST
  • பாடலுக்கேற்ற நடனமாடி மக்களை மகிழ்வித்தனர்
  • இன்னிசை கலந்த பாட்டு பட்டிமன்றம் நடக்கிறது

வேலூர்:

வேலூர் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் 39-ம் ஆண்டு விஜயதசமி இலக்கிய விழா நேற்று தொடங்கி இன்று மாலை பாட்டு பட்டிமன்றத்துடன் நிறைவடைகிறது.

முதல் நாளான நேற்று மாலை மண்ணுக்கேற்ற ராகம் என்ற தலைப்பில் மக்களிசைக்குழுவினரின் நாட்டுப்புற, தெம்மாங்கு பாடல், இசை நிகழ்ச்சி நடந்தது.

கெங்கையம்மன் கோவில் திடலில் நடந்த இசை நிகழ்ச்சிக்கு விஜயதசமி இலக்கிய விழாக்குழு செயலாளரும், ராணிப் பேட்டை பொறியியல் கல்லூரி இயக்குனர் மற்றும் திருஅருள் குழும நிறுவன ருமான உலகநாதன் தலைமை தாங்கினார்.

சத்துவாச்சாரி செங்குந்த சமுதாய கமிட்டி செயலாளரும், விஜயதசமி இலக்கிய விழாக் குழு தலைவரும், எஸ்.எம் எஸ் கிராண்ட் ஒட்டல் இன் உரிமையாளருமான எஸ். எம்.சுந்தரம் வரவேற்றார்.

சத்துவாச்சாரி செங்குந்த சமுதாய கமிட்டி பொருளாளர் டி.எம். மார்கபந்து, சத்துவாச்சாரி செங்குந்த சமுதாய கமிட்டி தலைவர் பி.எஸ். சுகுமார், விஜயதசமி இலக்கிய விழாக்குழு பொருளாளர் ஞானசேகரன், எஸ்.எம்.எஸ். கணேசன், யு.அருளரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் எம்.எல்.ஏ,ஞான சேகரன், மாநகர மேயர் சுஜாதா, மண்டலக்குழு தலைவர் நரேந்திரன், கவுன்சிலர் சுமதி, அருணோதயம், வேலூர் மேற்கு மாவட்ட தெ.செ.ம.சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

சிறப்பு விருந்தினராக ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனை இயக்குனர் மற்றும் அறங்காவலர் என். பாலாஜி கலந்து கொண்டு மக்களிசை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து மண்ணுக்கேற்ற ராகம் என்ற தலைப்பில் நடந்த நாட்டுப்புற, தெம்மாங்கு இன்னிசை நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட பின்னணி பாடகர் செந்தில்கணேஷ், பின்னணி பாடகி ராஜலெட்சுமி குழுவினர் நாட்டுப்புற பக்தி பாடல்களையும், நாட்டுப்புற, தெம் மாங்கு பாடல்களையும் அசத்தி பார்வையாளர்களை கவர்ந்தனர். மேலும் இதில் தத்ரூபமாக அம்மன், முருகன், விநாயகர் உருவம் தாங்கியவர்கள் பாடலுக்கேற்ற நடனமாடி மக்களை மகிழ்வித்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் விஜயதசமி இலக்கிய விழாக்குழு மற்றும் செங்குந்த சமுதாய கமிட்டியினர் செய்திருந்தனர். இலக்கிய விழாவில் தொடர்ந்து இன்று 2-வது நாளாக பிரபல மக்கள் கவிஞர் அரு. நாகப்பன் தலைமையில் இன்னிசை கலந்த பாட்டு பட்டிமன்றம் நடக்கிறது.

Tags:    

Similar News