உள்ளூர் செய்திகள்

வான வேடிக்கையின் போது பட்டாசு வெடித்து விபத்து

Published On 2023-05-16 15:23 IST   |   Update On 2023-05-16 15:23:00 IST
  • சிறுவர், சிறுமி உட்பட 5 பேர் படுகாயம்
  • பட்டாசுகள் வெடிக்கும் பகுதிக்கு அருகே இருந்த பொதுமக்கள் மீது வெடித்த பட்டாசுகள் விழுந்தது

குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழாவின்போது சிரசு திருவிழாவின் இரவு நிகழ்ச்சியாக கண் கவரும் வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறும் இதில் பல வண்ணங்களில் பல விதங்களில் பட்டாசுகள் வெடிக்கப்படும்.

இதைக் காண குடியாத்தம் நகரை மட்டுமில்லாமல் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கவுண்டன்யா மகாநதி ஆற்றின் இரு பக்க கரைகளிலும் மணி கணக்கில் காத்திருந்து வானவேடிக்கையை கண்டு ரசித்துச் செல்வார்கள் வழக்கம் போல் நேற்று இரவு சிரசு கோவிலில் இருந்து புறப்பட்டதும் வான வேடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது.

அப்போது பட்டாசுகள் வெடிக்கும் பகுதிக்கு அருகே இருந்த பொதுமக்கள் மீது வெடித்த பட்டாசுகள் விழுந்து உள்ளது.

இதில் குடியாத்தம் நெல்லூர் பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜீவா (வயது 26), ரித்தீஷ் (17), பிரவீன் (18), கள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த தனுஷ் (13), தட்டப்பாறை கிராமத்தைச் சேர்ந்த பூர்ணிமா (13) உள்ளிட்ட 5 பேர் பட்டாசு விபத்தில் காயமடைந்தனர்.

உடனடியாக 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்து தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News