குடியாத்தத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி சென்ற காட்சி.
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
- பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
- தீமைகள் குறித்து பதாகைகள் ஏந்தி ஊர்வலம்
குடியாத்தம்:
தமிழக அரசின் உத்தரவின் பேரில் குடியாத்தத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் பேரணி நடைபெற்றது.
குடியாத்தம் தாலுகா அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் பேரணி நிகழ்ச்சிக்கு குடியாத்தம் உதவி கலெக்டர் எஸ்.தனஞ்செயன் தலைமை தாங்கினார். குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம், நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைப்பொருள் தடுப்பு குறித்தும் போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
முன்னதாக போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்தனர்.
இந்நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.