குடியாத்தம் நகரமன்ற தலைவர் சவுந்தரராஜன் போலீசில் புகார் அளித்த காட்சி.
எம்.எல்.ஏ., நகரமன்ற தலைவர் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு பதிவு
- கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
- போலீசில் புகார்
குடியாத்தம்,
வேலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார், குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், நகரமன்ற உறுப்பினர் ஜி.எஸ்.அரசு, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம்.எஸ்.அமர்நாத் உள்ளிட்டோர் புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.
குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழாவின் போது கடைகள் மற்றும் ராட்டினம் போன்ற விளையாட்டு அம்சங்களை தடை செய்துவதாகவும் குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்களின் சந்தோஷத்தை சீர்குலைப்பதாக பல்வேறு அவதூறு கருத்துக்களை கூறி சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தனர்.
நேற்று இந்த பதிவுகளை பதிவிட்டவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், நகர்மன்ற உறுப்பினர்களுடன் சென்று குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோடீஸ்வரனிடம் புகார் அளித்தார்.
புகாரை பெற்றுக் கொண்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
நகரமன்ற தலைவர் சவுந்தரராஜன் உடன் நகராட்சி வழக்கறிஞர் எஸ்.விஜயகுமார், நகர்மன்ற உறுப்பினர்கள் ஜி.எஸ்.அரசு, ஆட்டோமோகன், சி.என்.பாபு, எம்.எஸ்.குகன், சவுந்தரராஜன், ஏகாம்பரம் உள்பட 20-க்கும் மேற்பட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம்.எஸ்.அமர்நாத், கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.