உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் சி.ஆர்.பி.எப். வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

Published On 2023-10-30 15:06 IST   |   Update On 2023-10-30 15:06:00 IST
  • பணி சுமையால் விபரீதம்
  • விமானம் மூலம் சொந்த ஊரான குடியாத்தத்திற்கு கொண்டு வர ஏற்பாடு

வேலூர்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ராஜகணபதி நகரை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 58). இவர் சத்தீஸ்கர் மாநில 19-வது பட்டாலியனில் சி.ஆர்.பி.எப். சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

இவரது மனைவி வசந்தா. தம்பதியின் மகள் சுஷ்மா (டாக்டர்), மகன் ஜஸ்வந்த் (என்ஜினியர்) உள்ளனர்.

இந்த நிலையில் குணசேகரன் சத்தீஸ்கர் மாநிலத்தில் பணியில் இருந்த போது துப்பாக்கி யால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்ப ட்டுள்ளது.

இதனை தொடர்ந்து குணசேகரன் உடலை விமானம் மூலம் சொந்த ஊரான குடியாத்தத்திற்கு கொண்டுவர தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இங்கு அரசு மரியாதை யுடன் குணசேகரன் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. முதற்கட்ட விசார ணையில் பணி சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

Tags:    

Similar News