மாணவியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
- சித்தூரை சேர்ந்தவர்
- வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்
வேலூர்:
ஆந்திர மாநிலம், சித்தூர் அடுத்த வேப் பஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார்(வயது 39). இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், சசிகுமார் அவ்வப்போது வேலூர் மாவட்டம், பொன்னை அருகே உள்ள பகுதியை சேர்ந்த அவரது உறவினர் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.
அப்போது, உறவினரின் மகளான 12-ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் சசிகுமார் திருமண ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என மாணவியை மிரட்டி உள்ளார். இந்த நிலையில் மாணவி திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதி அடைந்தார்.
சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் மாணவியிடம் விசாரித்தனர். அப்போது மாணவி கர்ப்பமானது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பொன்னை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சசிகுமாரை கைது செய்தனர். மேலும் கைதான சசிகுமாரை வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.