உள்ளூர் செய்திகள்
வேலூர் ஓட்டேரியில் சுடுகாட்டை சுற்றி வேலி அமைக்க முயற்சி
- பாதை கேட்டு பொதுமக்கள் போராட்டம்
- உரிய ஆவணங்களை கொண்டு சமர்ப்பிக்க உத்தரவு
வேலூர்:
வேலூர், ஓட்டேரி, காந்தி நகரில் உள்ள சுடுகாட்டை ஒட்டி பூந்தோட்டம் குடியிருப்பு பகுதி உள்ளது. பூந்தோட்டத்தில் சுமார் 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் சுடுகாட்டில் ஒரு பகுதியை சாலையாக பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் சிலர் இன்று காலை சுடுகாட்டை சுற்றிலும் வேலி அமைக்க வந்தனர். இதனைக் கண்ட பூந்தோட்டம் பகுதி மக்கள் வேலி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் தாசில்தார் செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரையும் சமாதானம் செய்தார். மேலும் பூந்தோட்டம் பகுதியில் உள்ள பொதுமக்கள் உரிய ஆவணங்களை கொண்டு சமர்ப்பிக்க வேண்டுமென உத்தரவிட்டார்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.