உள்ளூர் செய்திகள்
கிணற்றில் விழுந்த 2 மான்கள்.
2 மான்கள் கிணற்றில் தவறி விழுந்தது
- வனச்சரகர் 2 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்
- காப்புக்காட்டில் பத்திரமாக விடப்பட்டது
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த ஓட்டேரிப்பாளையம் பகுதியில் சண்முகம் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணறு உள்ளது. நேற்று வழி தவறி வந்த 2 ஆண் புள்ளி மான்கள் திடீரென இவரது கிணற்றில் தவறி விழுந்தன.
இதனை கண்ட சண்முகம் கிணற்றில் 2 மான்கள் தத்தளித்து கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி யடைந்தார். உடனடியாக அருகே இருந்த ஒடுகத்தூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனச்சரகர் இந்து தலைமையிலான வீரர்கள் தீயனைப்பு துறையினரின் உதவியுடன் மான்களை 2 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.
காயம் அடைந்திருந்த 2 புள்ளி மான்களுக்கும் முதலுதவி சிகிச்சை அளித்து வனச்சரகர் இந்து உத்தரவின்பேரில் அருகே இருந்த கருத்தமலை காப்புக்காட்டில் பத்திரமாக விட்டனர்.