உள்ளூர் செய்திகள்

திருநாவலூரில் ஆண்களுக்கான குடும்ப நல கருத்தடை குறித்த பிரச்சார வாகனத்தை மருத்துவ அலுவலர் செல்வி கொடி அசைத்து தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

திருநாவலூரில் ஆண்களுக்கு குடும்ப நல கருத்தடை குறித்த வாகன பிரச்சாரம்

Published On 2023-11-27 06:31 GMT   |   Update On 2023-11-27 06:31 GMT
பெண்களுக்கான கருத்தடை சிகிச்சை பல்வேறு மருத்துவ காரணங்களால் செய்ய இயலாத போது அவர்களின் கணவர்கள் இந்த எளிய கருத்தடை சிகிச்சை முறையை மேற்கொண்டு பயன்பெறலாம்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண்களுக்கான குடும்ப நல கருத்தடை அறுவை சிகிச்சை குறித்த வாகன பிரச்சாரத்தை திருநாவலூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். செல்வி தொடங்கி வைத்தார். இதில் மருத்துவ அலுவலர் அசுவினி, வட்டார புள்ளியியலாளர் சாந்தி, சுகாதார ஆய்வாளர் முருகன், கவியரசரன், கோபிநாத், பகுதி சுகாதார செவிலியர் மின்னல் கொடி, செவிலியர்கள் சரண்யா, சரசு, சுஜிதா, மருந்தாளுனர் ராமன், ஆய்வக நுட்பனர் ராதிகா, புவனேஸ்வரி, கிராம சுகாதார செவிலியர்கள் சரண்யா, ஸ்ரீதேவி, ஆரோக்கியமேரி, கொசு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பெண்களுக்கான கருத்தடை சிகிச்சை பல்வேறு மருத்துவ காரணங்களால் செய்ய இயலாத போது அவர்களின் கணவர்கள் இந்த எளிய கருத்தடை சிகிச்சை முறையை மேற்கொண்டு பயன்பெறலாம்.ஆண்டு முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த சிகிச்சை முறை அளிக்கப்படுகிறது என்று வட்டார மருத்துவ அலுவலர் தெரிவித்தார்.

Tags:    

Similar News