உள்ளூர் செய்திகள்

பாளையில் அரசு சார்பில் வள்ளலார் முப்பெரும் விழா- சபாநாயகர் அப்பாவு பங்கேற்பு

Published On 2022-10-23 13:46 IST   |   Update On 2022-10-23 13:46:00 IST
  • பாளை வ.உ.சி. மைதானம் அருகே உள்ள மண்டபத்தில் வள்ளலாரின் முப்பெரும் விழா இன்று நடைபெற்றது.
  • வெற்றி பெற்றவர்களுக்கு சபாநாயகர் அப்பாவு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கினார்.

நெல்லை:

வள்ளலாரின் தர்மசாலை தொடங்கி 156-வது ஆண்டு தொடக்க விழா உள்பட முப்பெரும் விழாவை கொண்டாட தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த விழாவை வள்ளலாரின் 200-வது அவதார ஆண்டான இந்த ஆண்டு அக்டோபர் முதல் அடுத்த ஆண்டு வரை 52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் அரசு விழாவாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பாளை வ.உ.சி. மைதானம் அருகே உள்ள மண்டபத்தில் வள்ளலாரின் முப்பெரும் விழா இன்று நடைபெற்றது.

இந்த விழாவுக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். இதில் அப்துல் வஹாப் எம்.எல்.ஏ., நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜு, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் வள்ளலார் புகழ் பற்றி பாடும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சபாநாயகர் அப்பாவு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை நெல்லை மண்டல இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News