உள்ளூர் செய்திகள்
முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த வாலிபர், குடும்பத்தினர் மீது போலீசில் புகார்
- தெய்வானை என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
- சசிகுமார், அவரது பெற்றோர் மகேந்திரன், சாரதா, தெய்வானை ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள நல்லப்பநாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி அனுபிரபா (வயது 25).
குடும்ப தகராறு காரணமாக அனுபிரபா தனது தாய்வீட்டுக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சசிகுமார் தெய்வானை என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து பர்கூர் அனைத்து மகளிர் போலீசில் அனுபிரபா புகார் கொடுத்துள்ளார்.
அதன்பேரில் சசிகுமார், அவரது பெற்றோர் மகேந்திரன், சாரதா, தெய்வானை ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.