உள்ளூர் செய்திகள்

தரமணி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் பகுதியில் 2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்

Published On 2023-01-10 14:14 IST   |   Update On 2023-01-10 14:14:00 IST
  • நெம்மேலியில் உள்ள கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
  • பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னை:

சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

வேளச்சேரி-தாம்பரம் சாலையில் (தேசிய காற்று சக்தி நிறுவனம் எதிரில் தற்போதுள்ள 800 மி.மீ விட்டமுள்ள கடல்நீர் சுத்திகரிப்பு பரிமாற்றக் குழாயினை மடிப்பாக்கம் குடிநீர் விநியோக அமைப்புடன் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் நெம்மேலியில் உள்ள கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

எனவே பகுதி 13-ல் உள்ள தரமணி, வேளச்சேரி மெயின் ரோடு, பகுதி 14-ல் உள்ள ஒக்கியம்-துரைப்பாக்கம், கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம் பகுதி 15-ல் உள்ள சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி இடங்களில் நாளை (11-ந்தேதி), 12-ந்தேதி ஆகிய 2 நாட்களில் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள பகுதி பொறியாளர்களின் செல்போன் எண்கள் 8144930913, 8144930914, 8144930915 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News