உள்ளூர் செய்திகள்

திருச்சி புத்தகத் திருவிழா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் - அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தனர்

Published On 2022-09-04 09:44 GMT   |   Update On 2022-09-04 09:44 GMT
  • திருச்சியில் வருகிற 16-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை 11 நாட்கள் செப்டம்பர் பதினாறு, திருச்சி எழுதப்போகும் புதிய வரலாறு என்ற தலைப்பில் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது.
  • புத்தகத் திருவிழாவிற்கான விளம்பர ஸ்டிக்கர்களை பேருந்துகளிலும், திருச்சி மாவட்டம் முழுவதும் விநியோகிக்கப்படும் 20 லிட்டர் குடிநீர் கேன்களிலும் ஒட்டும் பணியினை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

திருச்சி :

திருச்சியில் வருகிற 16-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை 11 நாட்கள் செப்டம்பர் பதினாறு, திருச்சி எழுதப்போகும் புதிய வரலாறு என்ற தலைப்பில் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இன்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புத்தகச் சுவர் திறப்பு விழா மற்றும் திருச்சி புத்தகத் திருவிழா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தனர்.

இதில் பொதுமக்கள் தாங்கள் வாசித்த நல்ல நூல்களையும், நேசிக்கும் புதிய நூல்களையும், தாமாக முன்வந்து நன்கொடையாக கொண்டு வந்து வழங்கலாம். இங்கு சேகரிக்கப்படும் புத்தகங்கள் அனைத்தும் கிராமப்புற நூலகங்களுக்கு வழங்கப்படவுள்ளது. காசு சேமித்து அதனைக் கொண்டு புத்தகம் வாங்கி படிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்த, மண்பாண்டத்தால் செய்யப்பட்ட உண்டியல்களை, 200-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, அமைச்சர்கள் வழங்கினர்.

மேலும், திருச்சியில் நடைபெறும் புத்தகத் திருவிழாவிற்கான விளம்பர ஸ்டிக்கர்களை பேருந்துகளிலும், திருச்சி மாவட்டம் முழுவதும் விநியோகிக்கப்படும் 20 லிட்டர் குடிநீர் கேன்களிலும் ஒட்டும் பணியினை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

இன்று முதல் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்படும் கடிதங்கள் அனைத்திலும், புத்தகத் திருவிழாவிற்கான விளம்பரம் முத்திரையிடப்பட்டு அனுப்பும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுவருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் மா.பிரதீப்குமார், மேயர் மு.அன்பழகன், மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், வருவாய் ஆய்வாளர் அபிராமி, மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன்,

எம்.எல்.ஏ.க்கள் பழனியாண்டி, சவுந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், சேர்மன் துரைராஜ், நிர்வாகிகள் மாவட்ட துணைச்செயலாளர் முத்துச் செல்வம், பகுதி செயலாளர் மோகன்தாஸ், மூக்கன், கவுன்சிலர்கள் ராமதாஸ், புஷ்பராஜ், மற்றும் பந்தல் ராமு, மணிவண்ணன், திருப்பதி, மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News