உள்ளூர் செய்திகள்

அரசு மதுபான கடை முன்பு ஆண் பிணம் - போலீசார் விசாரணை

Published On 2022-11-02 15:12 IST   |   Update On 2022-11-02 15:12:00 IST
  • நெல்பேட்டை அருகில் உள்ள அரசு மதுபான கடை முன்பு சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார்.
  • அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரிய வில்லை

திருச்சி,

திருச்சி தஞ்சை ரோடு நெல்பேட்டை அருகில் அரசு மதுபான கடை உள்ளது. இந்த கடை முன்பு சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார்.

தகவல் அறிந்து திருச்சி வரகனேரி கிராம நிர்வாக அலுவலர் சூசை ஆரோக்கியராஜ் காந்தி மார்க்கெட் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த நபர் யார் ?எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News