உள்ளூர் செய்திகள்

ரூ.1.52 கோடி மோசடி செய்த தனியார் வங்கி மேலாளர்

Published On 2022-07-07 10:00 GMT   |   Update On 2022-07-07 10:00 GMT
  • ரூ.1.52 கோடி மோசடி செய்த தனியார் வங்கி மேலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
  • மூன்று கோடி ரூபாயை டெபாசிட் செய்துள்ளார்.

திருச்சி , ஜூலை.7-

திருச்சி மாநகரம் தில்லை நகர் பத்தாவது குறுக்கு மேற்கு விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் ராம்குமார். இவர் தனக்கு சொந்தமான கிங் பாரடைஸ் என்ற உணவகத்தை மூன்று கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.இந்நிலையில் பின் கேர் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் என்ற தனியார் நிறுவனத்தின் பணியாளர் மற்றும் உதவி மேலாளர் லட்சுமி காந்த் ஆகியோர் ராம்குமாரை அணுகி தங்களுடைய வங்கியில் இந்த பணத்தை டெபாசிட் செய்யுமாறு கேட்டுள்ளனர். அதன் அடிப்படையில் ராம்குமார் தன்னுடைய சகோதரர் அழகுராஜா மற்றும் தன்னுடைய தாய் லலிதா ஆக்கி ஆகியோர் பேரில் மூன்று கோடி ரூபாயை டெபாசிட் செய்துள்ளார்.இதில் உதவி மேலாளர் லட்சுமி காந்த் தனியாக ஒரு கணக்கு ராம்குமாருக்கு தெரியாமல் துவங்கி ஒரு கோடியே 52 லட்சத்து 46 ஆயிரம் ரூபாயை அந்த தனி கணக்கிற்கு மாற்றியுள்ளார். இதனை அறிந்த ராம்குமார் செசன்ஸ் நீதிமன்ற காவல் நிலையத்தில் தன்னை உதவி மேலாளர் லட்சுமி காந்த் என்பவர் ஏமாற்றி விட்டதாக கூறி புகார் மனு அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News