உள்ளூர் செய்திகள்
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர்,முதல்வர் பாராட்டினர்.
மாநில அளவிலான சதுரங்க போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி முதலிடம்
- நெல்லையில் நடந்த சதுரங்க போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
- போட்டியில் மாணவிகள் பிரிவில் ஹரி நந்தனா முதல் இடம் பெற்று வெற்றி பெற்றார்.
தென்காசி:
மாநில அளவில் மேக்னஸ் செஸ் அகாடமி ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இணைந்து நெல்லையில் பள்ளிகளுக்கு இடையே நடத்திய சதுரங்க போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர் ஜெகத் பிரபு மாணவர்கள் பிரிவில் முதல் இடத்திலும், மாணவி ஹரி நந்தனா மாணவிகள் பிரிவில் முதல் இடமும் பெற்று வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் டாக்டர் சேக் செய்யது அலி மற்றும் முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பாராட்டினர்.