உள்ளூர் செய்திகள்

புதியதாக திறக்கப்பட்ட பிரியாணி கடை முன்பு திரண்ட திருநங்கைகள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது எடுத்தபடம்.

புதியதாக திறக்கப்பட்ட பிரியாணி கடை முன்பு அன்பளிப்பு பணம் கேட்டு கூச்சலிட்ட திருநங்கைகள்: போலீசாருடன் வாக்குவாதம்

Published On 2023-11-01 09:08 GMT   |   Update On 2023-11-01 09:08 GMT
  • அப்போது அங்கு இருந்தவர்கள் அன்பளிப்பு பணம் தர மறுத்தனர்.
  • இதற்காக நின்று கொண்டு இருக்கிறோம் என தெரிவித்தனர்.

கடலூர்:

கடலூர் மஞ்சக்குப்பத்தில் தனியார் பிரியாணி கடை திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. அப்போது 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் திடீரென்று கடைக்குள் சென்று அன்பளிப்பாக பணம் கேட்டனர். அப்போது அங்கு இருந்தவர்கள் அன்பளிப்பு பணம் தர மறுத்தனர். ஆத்திரமடைந்த திருநங்கைகள் கடை நிர்வாகத்தை கண்டித்து கூச்சலிட்டனர். இதையடுத்து கடை உரிமையாளர் வெளியில் வந்து தேவையற்ற முறையில் கூச்சலிட வேண்டாமென திருநங்கைகளிடம் கூறினார்.இருந்தபோதிலும் திருநங்கைகள் கடைக்கு முன்பு நீண்ட நேரம் காத்திருந்தனர் தகவலறிந்த கடலூர் புதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 

ஏன் கடை முன்பு நிற்கிறீர்கள்? அனைவரும் கலைந்து செல்லுங்கள் திருநங்கைகளிடம் போலீசார் கூறினர். அப்போது திடீரென்று திருநங்கைகள் புதிதாக கடை திறந்து உள்ளதால் எங்களுக்கு அன்பளிப்பாக பணம் வழங்கினால் ஆசீர்வாதம் செய்வோம். இதற்காக நின்று கொண்டு இருக்கிறோம் என தெரிவித்தனர். அப்போது போலீசார் தற்போது யாரும் நிற்க வேண்டாம். முதலில் கலைந்து சொல்லுங்கள் என தெரிவித்தனர். திடீரென்று திருநங்கைகள் போலீசாரிடம் வாக்குவாத த்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் கடும் எச்சரிக்கை செய்தனர். இதன் காரணமாக திருநங்கைகள் கூச்சலிட்டபடியே அங்கிருந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News