உள்ளூர் செய்திகள்

நுண்ணீர் பாசனம் குறித்த பயிற்சி நடைபெற்ற போது எடுத்த படம்.

சிறுநல்லிகோயில் கிராம விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனம் குறித்த பயிற்சி

Published On 2022-06-18 07:01 GMT   |   Update On 2022-06-18 07:01 GMT
சிறுநல்லிகோயில் கிராம விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனம் குறித்த பயிற்சி நடந்தது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார வேளாண்மை - உழவர் நலத்துறை அட்மா திட்டம் மூலம் சிறுநல்லிகோயில் கிராம விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனம் குறித்த பயிற்சி நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி பயிற்சியை தொடங்கி வைத்து அரசின் வேளாண் திட்டங்களை எடுத்துக் கூறினார்.

ரிவுலிஸ் சொட்டுநீர் பாசன நிறுவன உழவியல் நிபுணர் கிருஷ்ணா நுண்ணீர்பாசனத்தின் பயன்கள், நுண்ணீர்ப்பாசன வழி உரமிடுதல், பராமரிப்பு வழிமுறைகள் குறித்து விரிவாக விளக்கிக்கூறி விவசாயிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் சந்திரசேகரன், அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர் செல்வகண்ணன், உழவர் ஆர்வலர் குழு நிர்வாகிகள் சரவணன், பாலசுப்ரமணியம், உழவர் நண்பர் விஸ்வநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News