பராமரிப்பு பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 3 படகுகள்.
தேக்கடியில் சுற்றுலா பயணிகள் படகுகள் பராமரிப்பு பணி தொடக்கம்
- முல்லைபெரியாறு அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் 2 படகுகள் மட்டும் இயக்கப்படுகின்றன.
- 3 படகுகளில் உள்ள சிறிய அளவிலான பழுதுகளை பராமரிக்கும் பணி தொடங்கியுள்ளது.
கூடலூர்:
கேரள மாநிலம் தேக்கடி பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகும். இங்கு வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தேக்கடி புலிகள் காப்பம் மற்றும் படகு சவாரி செய்து கொண்டே வனவிலங்குகளை கண்டு ரசிப்பார்கள். இதற்காக சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஆர்வமாக படகு சவாரி செய்து வருகின்றனர்.
ஏரியில் கேரள மாநில சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் 5 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 3 படகுகள் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறுகையில், தற்போது முல்லைபெரியாறு அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் 2 படகுகள் மட்டும் இயக்கப்படுகின்றன.
கோடை விடுமுறையின் போது சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். எனவே 3 படகுகளில் உள்ள சிறிய அளவிலான பழுதுகளை பராமரிக்கும் பணி தொடங்கியுள்ளது. விரைவில் இந்த படகுகள் சேவைக்கு கொண்டுவரப்படும் என்றனர்.