உள்ளூர் செய்திகள்

வக்கீல் கனகராஜ்

நெல்லையில் நாளை புதிய தமிழகம் சார்பில் வீரவணக்க பொதுக்கூட்டம்- கட்சியினர் திரளாக கலந்து கொள்ள தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அழைப்பு

Published On 2022-07-22 07:58 GMT   |   Update On 2022-07-22 07:58 GMT
  • நாளை நெல்லை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் அடிப்படை ஊதியத்திற்காகவும், உரிமைகளுக்காகவும் போராடி உயிர்நீத்த 17 மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு வீரவணக்க நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது.
  • மாலையில் புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி தலைமையில் வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட புதிய தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் வக்கீல் கனகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதிய தமிழகம்

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்துதரப்பு மக்களின் நலனுக்காக தொடர்ந்து போராடி வரும் இயக்கமாக புதிய தமிழகம் கட்சி உள்ளது.

நாளை (சனிக்கிழமை) நெல்லை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் அடிப்படை ஊதியத்திற்காகவும், உரிமைகளுக்காகவும் போராடி உயிர்நீத்த 17 மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு வீரவணக்க நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது.

வருடம்தோறும் இந்த வீரவணக்க நினைவஞ்சலி புதிய தமிழகம் கட்சி சார்பில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, இந்தாண்டிற்கான வீரவணக்க நினைவஞ்சலி, வீரவணக்க பேரணி மற்றும் அதனைத்தொடர்ந்து அன்று மாலையில் புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி தலைமையில் வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து புதிய தமிழகம் கட்சியினர் திரளாக சென்று பங்கேற்றிட வேண்டும் என்று ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் முழுஒத்துழைப்பு தந்து சிறப்பித்திட வேண்டும்.

எனவே மாவட்டம் முழுவதும் உள்ள புதிய தமிழகம் தொண்டர்கள், கட்சியினர் அனைவரும் குடும்பத்துடன் அணி திரண்டு வந்து பங்கேற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News