உள்ளூர் செய்திகள்

2 -வது நாளான இன்று பி.இ.படிப்புக்கு விண்ணப்பிக்க மாணவர்கள் குவிந்தனர்

Published On 2022-06-21 10:28 GMT   |   Update On 2022-06-21 10:28 GMT
  • என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். போன்ற படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு 110 உதவி மையங்களில் நேற்று தொடங்கியது.
  • அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் 2 -வது நாளான இன்று பி.இ.படிப்புக்கு விண்ணப்பிக்க மாணவர்கள் குவிந்தனர்.

சேலம்:

தமிழ்நாடு அரசு உயர்கல்வித்துறை, தொழில் நுட்ப கல்வி இயக்கத்தின் கீழ் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். போன்ற படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு 110 உதவி மையங்களில் நேற்று தொடங்கியது.

சேலம் மாவட்டத்தில் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி வளாக முதலாம் நுழைவுவாயில் பகுதியில் உள்ள நூலக கட்டிட வளாகத்தில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று காலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதை ெதாடர்ந்து நேற்று முதல் நாளில் இங்கு ஏராளமான மாணவ- மாணவிகள் விண்ணப்பித்தனர். இங்கு அதிவேக இணையசேவையுடன் 50 கணினிகள் தயார் நிலையில் உள்ளன. ஒரே நேரத்தில் 50 மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

இதனால் 2-வது நாளான இன்று சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து மாணவ- மாணவிகள் பலர் என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க தங்களது பெற்றோருடன் உதவி மையத்திற்கு வந்தனர்.

விண்ணப்பம் பதிவு செய்ய மாணவர்கள் 10, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், எமிஸ் எண் விபரங்களை கொண்டு வரவேண்டும். பொது பிரிவினருக்கு ரூ.500, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.250 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News