உள்ளூர் செய்திகள்

முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான விதிகள் தளர்வு

Published On 2024-01-12 13:24 IST   |   Update On 2024-01-12 15:31:00 IST
  • முதுநிலை மருத்துவ மாணவர்கள் படிப்பை முடித்த பிறகு அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் 2 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும்.
  • பணியாற்ற விருப்பம் இல்லாதவர்கள் செலுத்த வேண்டிய தொகையும் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.

முதுநிலை மருத்துவ மாணவர்கள் படிப்பை முடித்த பிறகு அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் 2 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என்ற விதியை தளர்வு செய்து தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

முன்னதாக முதுநிலை மருத்துவ மாணவர்கள் படிப்பை முடித்த பிறகு அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் 2 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும். தற்போது அது ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற விருப்பம் இல்லாதவர்கள் செலுத்த வேண்டிய தொகை 40 லட்சம் ரூபாய் என்பதில் இருந்து 20 லட்சம் ரூபாயாக குறைத்தும், பிஜி டிப்ளோமா மாணவர்கள் 20 லட்சத்திற்குப் பதிலாக 10 லட்சம் ரூபாய் செலுத்தினால் போதும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News