உள்ளூர் செய்திகள்
கண்ணமங்கலம் பகுதியில் வாக்காளர் சேர்ப்பு முகாம் நடந்த போது எடுத்த படம்.
கண்ணமங்கலம் பகுதியில் வாக்காளர் சேர்ப்பு முகாம்
- புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்க மனுக்கள் வழங்கினர்
- திரளான இளைஞர்கள், பெண்கள் மனுக்கள் அளித்தனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் பகுதியில் உள்ள இந்து ஆரம்பப்பள்ளி முற்றிலும் இடிக்கப்பட்டது. இதனால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கல், திருத்தம் சிறப்பு முகாம் கிராம நிர்வாக அலுவல கத்தில் நடைபெற்றது.
கண்ணமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் பொற்கொடியிடம் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்க மனுக்கள் வழங்கினர்.
கிராம உதவியாளர் ஞானவேல் உள்பட பலர் உடனிருந்தனர். இதேபோல் கண்ணமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் பகுதி (1) வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாமில் திரளான இளைஞர்கள், பெண்கள் மனுக்கள் அளித்தனர்.