- விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்
- அக்ரி.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. நேரில் ஆறுதல்
போளூர்:
போளூர் வசந்தம் நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் பாபு, இவர் எதப்பட்டு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி மஞ்சுளா, கட்டுப்பூண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் 2 மகள்கள் உள்ளனர்.
இவர்களது கடைசி மகன் அரவிந்த் (16) ஆரணியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் வீட்டு மாடியில் அரவிந்த் மற்றும் நண்பர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் மேல் செல்லும் உயிர் அழுத்த மின் கம்பி அரவிந்த் மேல் பட்டு தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடி துடிக்க உடல் கருகி இறந்தார். இது குறித்து போளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்
ஜெயபிரகாஷ் விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி போளூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.
இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறிந்து போளூர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. நேரில் சென்று அரவிந்த் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.