உள்ளூர் செய்திகள்

உரக் கடைகளில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை

Published On 2022-12-27 14:49 IST   |   Update On 2022-12-27 14:49:00 IST
  • நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
  • இணை உரத்தை கட்டாயப்படுத்தி விற்பதாக புகார்

வந்தவாசி:

வந்தவாசி பகுதியில் உள்ள சில தனியார் உரக் கடைகளில் தடைசெய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து விற்கப்படுவதாக கூறிவந்தவாசி தாலுகா அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாநில செய்தி தொடர்பாளர் வாக்கடை புருஷோத்தமன் தலைமை வகித்தார். பின்னர் விவசாயிகள் கூறுகையில், "வந்தவாசி பகுதியில் உள்ள சில தனியார் உரக் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் விவசாயிகள் யூரியா உரம் வாங்கும்போது, அதனுடன் சுமார் ரூ.1,500 மதிப்புள்ள இணை உரத்தை கட்டாயப்படுத்தி விற்கின்றனர்.

இது குறித்து வேளாண் துறையிடம் புகார் செய்தால் அவர்கள் நடவடிக்கை எதுவும் எடுப்பதில்லை. எனவே இதனை கண்டித்து நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டுள்ளோம்" என்றனர். ஆர்ப்பாட்டத்தின்போது சிலுவை போன்று அமைத்த ஒன்றை தூக்கிக்கொண்டும்,ஒருவர் கிறிஸ்துமஸ்தாத்தா போன்று வேடமிட்டும் கலந்து கொண்டு கோஷமிட்டனர்.

இது தொடர்பாக தாலுகா அலுவலகத்தில் துணை தாசில் தார் சதீஷிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

Tags:    

Similar News