உள்ளூர் செய்திகள்

ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடந்த போது எடுத்த படம்.

வட்டார வளர்ச்சி சார்பில் ஒதுக்கப்பட்ட ரூ.8 லட்சம் நிதி நிராகரிப்பு

Published On 2023-02-14 09:41 GMT   |   Update On 2023-02-14 09:41 GMT
  • ஆரணி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம்
  • அரசு துறை அதிகாரிகள் பங்கேற்கவில்லை

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை வீதியில் உள்ள ஆரணி ஒன்றிய கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம் ஒன்றிய குழு தலைவர் கனிமொழி சுந்தர் தலைமையில் நடைபெற்றது.

இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி அனைவரையும் வரவேற்றார். துணை தலைவர் கே.டி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். மேலும் இதில் எஸ்.வி.நகரம் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் கவிதாபாபு பேசியாதாவது:-

எங்கள் எஸ்.வி.நகரம் கிராமத்தில் குடிநீர் பிரச்சினை அதிகளவில் உள்ளன. அடிக்கடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாறுவதால் யாரிடம் பிரச்சனை கூறுவது என்று தெரியவில்லை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பிரச்சனைகள் தீர்க்க வட்டார வளர்ச்சி அலுவலகம் நடவடிக்கை எடுக்காததை வன்மையாக கண்டிக்கின்றேன்.

எங்கள் கிராமத்தில் குடிநீர் பிரச்சனை சம்பந்தமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர். அவர்களை சமாதானம் செய்து வைத்துள்ளோம் இவ்வாறு அவர் பேசினார்.

இதனையடுத்து ஒன்றிய துணை சேர்மன் ராஜேந்திரன் பேசியதாவது:-

பஞ்சாயத்து ஊராட்சியில் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு சிறிய அளவில் கூட மதிப்பில்லை ஆகையால் வட்டார வளர்ச்சி நிதியில் ஒதுக்கபட்ட ரூ.8 லட்சத்து 88 ஆயிரம் ஓதுக்கபட்ட 453 நெம்பர் கொண்ட தீர்மானத்தை நிராகரித்து ஒன்றிய கவுன்சிலர்கள் அனைவரும் கையொழுதிட்ட வேண்டும் என்று தீர்மானத்தை கொண்டு வந்தார்.

தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றி அனைத்து கவுன்சிலர்களும் கையொழுத்திட்டு தீர்மானத்தை நிராகரித்தனர். பஞ்சாயத்துக்கு ஒதுக்கிய நிதியை ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றி தீர்மானத்தை நிராகரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் அனைத்து தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றபட்டது. இதில் மற்ற அரசு துறை அதிகாரிகள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Tags:    

Similar News