ரத சப்தமி பிரமோற்சவ விழா 7-ம் நாளான இன்று அதிகாலை ஒ.ஜோதி எம்.எல்.ஏ. வடம் பிடித்து தேரை தொடங்கி வைத்த காட்சி.
செய்யாறு வேதபுரீஸ்வரர் கோவிலில் ரதசப்தமி பிரம்மோற்சவ தேரோட்டம்
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. வடம் பிடித்து தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுன், திருவொத்தூரில் அமைந்துள்ள திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமான பாலகுஜாம்பிகை உடனாய வேதபுரீஸ்வரர் கோவிலில் ரதசப்தமி பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது.
6ம் நாளான நேற்று காலை 63 நாயன்மார்கள் உற்சவம் வீதி உலா நடைபெற்றது. இரவு திருமண வைபோகம் நடைபெற்றது.
யானை வாகனத்தில் சுவாமி அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வெகு விமரிசையாக நடைபெற்றது.இன்று 7-ம் நாள் தேர் திருவிழா நடைபெறுகிறது.
இதனை ஒட்டி இன்று அதிகாலை சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓத, மங்கள வாத்தியத்துடன் ஒ.ஜோதி எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், நகர மன்ற தலைவர் மோகன் வேல் ஆகியோர்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தினை தொடங்கி வைத்தனர்.
பக்தர்கள் பலர் பெருமளவில்கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் சுவாமியை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து இன்று மாலை வரைதேரோட்டம் விழா நடைபெறுகிறது.