உள்ளூர் செய்திகள்

செய்யாறில் மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம்

Published On 2022-12-20 15:19 IST   |   Update On 2022-12-20 15:19:00 IST
  • முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்
  • 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

செய்யாறு:

செய்யாறு கோட்டம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் தேசிய மின் சிக்கன குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் பெரியார் சிலை அருகில் தொடங்கியது. ஊர்வலத்தை கோட்ட செயற்பொறியாளர் சரவணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

உதவி செயற்பொறியாளர்கள் வள்ளிகாந்தன், தெய்வசிகாமணி, பாண்டியராஜன், நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மின் சிக்கன வார விழிப்புணர்வு ஊர்வலத்தில் இளநிலை உதவி பொறியாளர்கள், அலுவலக பணியாளர்கள், களப்பணியாளர்கள், ஐடிஐ மாணவர்கள் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் பதாகைகள் ஏந்தி மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.

விழிப்புணர்வு ஊர்வலம் காந்தி சாலை, பஸ் நிலையம் ஆற்காடு சாலை வழியாக செய்யாறு மின்வாரிய அலுவலகத்திடம் நிறைவடைந்தது.

செய்யாறில் மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம். முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News