உள்ளூர் செய்திகள்

வந்தவாசியில் மருத்துவ முகாம் நடந்த காட்சி.

வந்தவாசியில் மருத்துவ முகாம்

Published On 2022-11-27 14:18 IST   |   Update On 2022-11-27 14:18:00 IST
  • இருதயம், நுரையீரல், மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்றனர்
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

வந்தவாசி:

வந்தவாசியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. வந்தவாசி அடுத்த கீழ் கொடுங்காளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமை வந்தவாசி ரோட்டரி சங்கம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் இணைந்து நடத்தினர்.

முன்னாள் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் டாக்டர் எஸ் குமார் முன்னிலை வகித்தார். மருத்துவர்கள் சக்தி குணவேல், கீதாஞ்சலி, சாயங்கா ஸ்ரீ, அடங்கிய மருத்துவ குழுவினர் முகாமிற்கு வந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

இந்த முகாமில், இருதயம், நுரையீரல், மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட சிறப்பு மருத்துவர்கள் பங்கு பெற்று சிகிச்சை அளித்தனர். கீழ் கொடுங்காளூர் சுற்றியுள்ள மருதாடு,கீழ்ப்பாக்கம், சாலவேடு, கொட்டை, மாமண்டூர், இரும்பேடு ஆகிய கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பங்கு பெற்று சிகிச்சை பெற்றனர். ரோட்டரி உறுப்பினர்கள் கார்வண்ணன், குணா, நித்தியா, வெங்கடேசன், பாலசுந்தர், கோபி மற்றும் ராஜசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News