உள்ளூர் செய்திகள்

ஒலிம்பிக் ஜோதி ஊர்வலத்துடன் விளையாட்டுப் போட்டிகள்

Published On 2023-03-09 09:47 GMT   |   Update On 2023-03-09 09:47 GMT
  • புறா மற்றும் கலர் வண்ண பலூன்களை பறக்க விட்டனர்
  • மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது

போளூர்:

போளூர் ஸ்ரீ ராமஜெயம் மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் விளையாட்டு போட்டிகள் நடந்தன. போளூர் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் ஒலிம்பிக் தீபச்சுடரை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார்.

போளூர் ஆஞ்சநேயர் கோவில் அருகே தொடங்கிய ஒலிம்பிக் ஜோதி முக்கிய வீதி வழியாக சென்றது சாரண சாரணியர் மற்றும் பல மாணவ மாணவிகளின் அணி வகுப்போடு போளூர் ஸ்ரீ ராம ஜெயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடலை அடைந்த தீபச்சுடரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஸ்ரீ ராம ஜெயம் கல்வி நிறுவனத்தின் சேர்மன் ஏழுமலையிடம் கொடுத்தனர்.

பின்பு சிறப்பு விருந்தினர் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்து மாணவ, மாணவி களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். தேசிய கொடி மற்றும் ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்தார். மாணவர்கள் அனைவரும் ஒற்றுமையுணர்வு சமத்துவத்தை பின்பற்ற வேண்டும் என்று புறா மற்றும் கலர் வண்ண பலூன்களை வானத்தை நோக்கி பறக்க விட்டார்.

மேலும் அவர் பேசுகையில்:-

மாணவர்கள் படிப்பு மட்டுமல்லாமல் விளையாட்டிலும் கலந்து கொள்ள வேண்டும் மாணவர்களாகிய நீங்கள் விளையாடுவதன் மூலம் நல்ல ஆரோக்கியமான உடல் நலத்தை பின்பற்றலாம் எனக் கூறினார்.

நிகழ்ச்சியில் மாணவ மாணவர்களின் கலை நிகழ்ச்சி பிரமிடுகள் போன்றவை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மெட்ரிக் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பி.ஆர்த்தி மற்றும் சிபிஎஸ்இ பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சரவணகுமார் மெட்ரிக் பள்ளி முதல்வர் ராஜேஷ் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து இருந்தனர். சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் ஆண்டனி தாமஸ் நன்றி கூறினர்.

Tags:    

Similar News