உள்ளூர் செய்திகள்

காய்ந்து போன கரும்புக்கு நஷ்டஈடு கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-12-29 16:02 IST   |   Update On 2022-12-29 16:02:00 IST
  • செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு நடந்தது
  • கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனரிடம் மனு வழங்கினர்

செய்யாறு:

செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு தமிழக உழவர் பேரவை சார்பில் விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு உழவர் பேரவை மாநில செய்தி தொடர்பாளர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ரமேஷ், அய்யப்பன், தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புருஷோத்தமன் பேசுகையில், செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை விவசாயிகள் பயிரிட்டிருந்த கரும்புகளை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாததால் அவை காய்ந்து பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும், அரவை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் கடந்த 5 நாட்களாக ஆலையில் கரும்பு பாரத்துடன் நிறுத்தி வைத்திருந்த லாரி, டிராக்டர்களுக்கு வாடகை தர வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

அதன்பின் கோரிக்கைகள் குறித்து உழவர் பேரவையினருடன் சென்று கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனரிடம் மனு வழங்கினர்.

Tags:    

Similar News