உள்ளூர் செய்திகள்

உண்டியல் பணம் எண்ணப்பட்ட காட்சி.

படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் ரூ.40 லட்சம் உண்டியல் வசூல்

Published On 2022-08-24 09:50 GMT   |   Update On 2022-08-24 09:50 GMT
  • தங்க நகை, வெள்ளி பொருட்கள் கணக்கிடப்படுகிறது
  • ஆடிவெள்ளிக்கிழமைகளையொட்டி அதிகளவிலான பக்தர்கள் தரிசனம்

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் ஆடிவெள்ளி விழா 5 வாரங்கள் நிறைவு பெற்றது.

இதையடுத்து கோவிலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை உண்டியல்கள் நேற்று காலை உதவி ஆணையர் ஜோதிலட்சுமி முன்னிலையில் திறக்கப்பட்டு பணம் எண்ணப்பட்டது.

படவேடு இந்தியன் வங்கி அலுவலர்கள் மற்றும் 100க்கும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

தற்போது வரை உண்டியல் எண்ணும் பணி நடந்து வருகிறது. சுமார் 40 லட்சம் மதிப்பில் பணமும், காணிக்கை தங்க நகைகள், வெள்ளி ஆகியவற்றின் மதிப்பு நகைமதிப்பீட்டாளர் மூலம் தெரியவரும் என செயல் அலுவலர் சிவஞானம் தெரிவித்தார்.

உண்டியல் பணம் எண்ணும் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர்கள் நடராஜன், சாந்தி, கோயில் மேலாளர் மகாதேவன், கணக்கர் சீனிவாசன் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.

Tags:    

Similar News