- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. பரிசு வழங்கினார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செய்யாறு:
செய்யாறு மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் அளவில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கிடையான ஓவியம், மாறுவேடம், கதை சொல்லுதல், தேச பக்தி பாடல்கள், வினாடி வினா, கட்டுரை, கவிதை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடைபெற்றது.
அதன் பரிசளிப்பு விழா செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு செய்யாறு மாவட்ட கல்வி அலுவலர் நளினி தலைமை தாங்கினார். செய்யாறு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் எல்லப்பன், தலைமை ஆசிரியர் ஜெயகாந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட தலைவர் ஆசிரியர் ஜி. செல்வதிருமால் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக ஓ.ஜோதி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒன்றி குழு தலைவர் திலகவதி ராஜ்குமார், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வழக்கறிஞர் ஜி அசோக், ஒன்றிய கவுன்சிலர் ஞானவேல், தலைமை ஆசிரியர்கள், ஜே.ஆர்.சி. ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் உள்பட பலர்திரளாக கலந்து கொண்டனர்.