உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்

உடுமலை பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிப்பால் வாகன ஓட்டுனர்கள் அவதி

Published On 2022-06-12 09:00 GMT   |   Update On 2022-06-12 09:00 GMT
  • சில தினங்களாக உடுமலையில் பலத்த காற்று வீசுகிறது.
  • மோட்டார் சைக்கிளில் செல்வோர் கவனமாக செல்ல வேண்டும்.

உடுமலை:

ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை காலம். கடந்த மே மாதம் கேரளாவில் பருவமழைகாலம் துவங்கியது. இதனால் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அவ்வகையில் சில தினங்களாக உடுமலையில் பலத்த காற்று வீசுகிறது. மாலையில் காற்றின் வேகம் அதிகரித்து சுழன்று அடிக்கிறது. இதனால் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டுனர்கள் திணறுகின்றனர்.

குறிப்பாக பொள்ளாச்சி வழித்தடத்தில் செல்லும் ஓட்டுனர்கள் சிலர் காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் ரோட்டோரம் வாகனத்தை நிறுத்தி விடுகின்றனர். மோட்டார் சைக்கிளில் செல்வோர் கவனமாக செல்ல வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News